விழிகளா அவைகள்

வெறும் விழிகளா - அவைகள்?
என் நெஞ்சைப் பிளக்கும் உளிகள்!

கண் காதல் பேசிடும் மொழியில்
வீழ்ந்துதான் போனேன் - அவள் காலடியில்!

என் எண்ணத்தில் வண்ணத்தைக் குழைத்தாள்
என் கைகளில் தூரிகையைக் கொடுத்தாள்
அவள் அழகை தினமும் இரசித்தேன்
பெரும் கலைஞனாய் உருவெடுத்தேன்

கோடானக்கோடி கற்பனைகள் கூடி
காதல் கவிதை முளைத்திட்டதே
என்னுள் இன்று தளைத்திட்டதே

என் கண்முன் அவள் வந்து நின்றாள்
கலை ஊற்றுக்கள் பீறிட்டுப் பொங்கும்
இதுதான் இளமையின் விந்தையோ?
எனைக் கொல்லத்தான் நீயிங்கு வந்தியோ?

இடை சின்னஞ்சிறு வஞ்சிக்கொடி
என் கரத்தில் ஏறி படருதடி
என்னைக் கண்டால் ஏனோ
பெண் நாணம் விட்டு
உன் கோவை இதழ்கள் மலருதடி!

எனைக் கொல்ல வந்த கொலைகாரி
எனைத் திருடிக் கொண்டு போவதேண்டீ?

உன்னிளம் பொன் சிரிப்பில்
என் மனம் கொள்ளை போகுதடி
என் விழி உனைத்தேடி வரும் போது
உன் விழி எனைக் கண்டு ஓடுதுதடி
என்னாசை உன்னில் தீரும்போது
என்னுயிர்தான் வந்து மீளுதடி!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Sep-19, 8:17 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : vizhikalaa avaikal
பார்வை : 62

மேலே