பிணி தீர்க்கும் கடைவிழியாள்

மல்லி மணக்குது
எனைச் சுண்டி இழுக்குது
அவள் சொல்லோ இனிக்குது
இதழ் புன்னைகை விரிக்கும் போது
என் எண்ணமெல்லாம் வானில் மிதக்குது!

கொலை செய்யும் உலகிலே
கலை மகளைக் கண்டேனே
தோகை மயில் ஒன்று
தந்தோகையை விரித்தின்று
நயமிக்க நளினத்தை ஆடிக்காட்டினாள்
அந்த முழுமதி அழகினில்
என் நெஞ்சை பறிகொடுத்தேன்
பூந்தென்றல் தீண்டினால்
நான் என்ன செய்வேன்?
மெய் மறந்துதான் போனேன்!

கண் கவரும் செம்பவளம்
கவிஞனாக்கும் செந்தமிழும்
கனவுலகில் மனம் பறக்கும்
தேன் இதழில் வண்டு மொய்க்கும்
உன் நாணம் எனை மயக்கும்
நீ தொட்டால் யாவும் இனிக்கும்
புதுக் கவிதை தினம் பிறக்கும்

உன் கால்களின் சலங்கை சத்தம்
எந்நாளும் எனை அழைக்கும்
உன் புன்னகை பூக்கும் போது
என் எண்ணமெல்லாம் வானில் மிதக்கும்
பிணிபோக்கும் கடைவிழியாள்
கொலை செய்தாள் குறுநகையாள்
இருள்வானில் முழு முகம் காட்டி
உலவுகிறாள் வெண்ணிலவாய்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Sep-19, 8:22 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 51

மேலே