நீயும் நானும் காதல் காதல்

பல்லவி:

நீயும் நானும் சேரும் நேரம்
இரவும் பகலும் மாறிப்போகும்
நீயும் நானும் பிரியும் நேரம்
மனதின் இருக்கம் கூடிபோகும்
விழிகள் வழியே பேசிக்கொள்ளும்
நிமிடங்கள் யாவும் கவிதைகளாகும்
பேசாத வார்த்தைகள் யாவும்
தாய்மொழியை இழந்து வாடும்
விரலோரம் கவிதைகள் ஊற
மனதில் நீயும் அழகாய் சிரிப்பாய்
சின்ன சின்ன சேட்டைகள் செய்ய
பொய்யாய் நீயும் கோபம் புரிவாய்
கடவுளிடம் பேசும் தருணம்
உன்னிடம் பேச உணர்ந்து கொள்வேன்
விழி அசைவில் ஆணைகள் போடு
ஆவலோடு பணிவிடைகள் புரிவேன்
(நீயும் நானும் )

ந.சத்யா
(பாடலாசிரியர்)

எழுதியவர் : ந.சத்யா (28-Sep-19, 7:59 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 371

மேலே