பெண்ணுக்கு பிடிக்கும்

……..தமிழே துனை…….



மேகம் கூட மயிலுக்கு பிடிக்கும்..!

மழையை ஏற்க மண்ணுக்கு பிடிக்கும்..!

சிலையை வடிக்க சிற்ப்பிக்கு பிடிக்கும்..!

திலகம் ஏந்த நெற்றிக்கு பிடிக்கும்..!

வருடி செல்ல காற்றிற்கு பிடிக்கும்..!

பேனா மைக்கு காகிதம் பிடிக்கும்..!

பேசி பழக நட்புக்கு பிடிக்கும்..!

எதுகை மோனை கவிதைக்கு பிடிக்கும்..!

ஏறி செல்ல எறும்பிற்கு பிடிக்கும்..!

கலங்கிய கண்கள் காதலுக்கு பிடிக்கும்..!

கலங்காத நெஞ்சம் ஆண்மைக்கு பிடிக்கும்..!

மண்ணை உண்ண மழலைக்கு பிடிக்கும்..!

கவிதை சொல்ல கவிஞனுக்கு பிடிக்கும்..!

மறைத்து பேச மங்கைக்கு பிடிக்கும்..!

மயக்க செய்ய போதைக்கு பிடிக்கும்..!

மனிதம் காக்க தமிழுக்கு பிடிக்கும்..!

கொட்டும் அருவி கோடைக்கு பிடிக்கும்..!

தத்தி தாவ முயலுக்கு பிடிக்கும்..!

இரவில் விழிக்க ஆந்தைக்கு பிடிக்கும்..!

இறுக்கி அணைக்க அன்புக்கு பிடிக்கும்..!

ஏங்க வைக்க ஆசைக்கு பிடிக்கும்..!

மூடி மறைக்க பொய்யுக்கு பிடிக்கும்..!

செவியை தீண்ட இசைக்கு பிடிக்கும்..!

அறிவை ஊட்ட ஆசானுக்கு பிடிக்கும்..!

ஆளுமை செய்ய தலைவனுக்கு பிடிக்கும்..!

தலைவனை பாட தலைவிக்கு பிடிக்கும்..!

அறுபது வயதில் அனுபவம் பிடிக்கும்..!

ஆழம் போக வேருக்கு பிடிக்கும்..!

தூக்கம் கலைக்க கனவுக்கு பிடிக்கும்..!

ஆசை தொலைக்க துறவிக்கு பிடிக்கும்..!

அமைதி வந்தால் அகிலம் பிடிக்கும்..!

ஆண்மை மலர்ந்தால் பெண்மை பிடிக்கும்..!

வேண்டும் என்றால் வருவது பிடிக்கும்..!

போதும் என்றால் இருப்பது பிடிக்கும்..!

தமிழுக்கு என்றும் கவிதை பிடிக்கும்..!

கவிதைக்கு என்றும் வருணிக்க பிடிக்கும்..!

அழகை வர்ணித்தால்தான் அவளுக்கு பிடிக்கும்..!

எழுதியவர் : Nandha Lakshman (28-Sep-19, 3:13 pm)
சேர்த்தது : NANDHA LAKSHMAN
Tanglish : pennukku pidikum
பார்வை : 77

மேலே