ஏழையின் சிரிப்பு

எப்புறமும் பொன் பொருள்
எப்பொழுதும் நல் அமுது

வசதியாய் வெளியே போக
வரிசையில் வண்டி நிற்கும்

வண்ணமும் நூறு சேர்ந்து
வஸ்திரம் வரிசை காட்டும்

கைகளில் சமிக்சை காட்ட
கடமையாய் வருவோர் நூறு

சுற்றமும் சூழ்ந்து கொண்டு
பெற்றது கணக்கில் இல்லை

வந்தவர் வாழ்த்தி வாழ்த்தி
கெளரவம் எனக்கே என்றார்

மனைவியின் பாசம் கூட
தலைவனாய் பார்த்து ஒதுங்க

அன்பெனும் அடிப்படையே
அண்டவும் விடாமல் விரட்டி

பிள்ளைகள் அந்த வழியே
போனதோ தூரம் தூரம்

தொழிலிலே நாட்டம் போக
தொலைந்தது நாட்கள் யாவும்

பிள்ளைகள் பேரன் பேத்தி
நினைவிலே வாழ்க்கை போக

பேரனின் பேரனுக்கும்
சேர்த்தது மண்ணும் பொன்னும்

வங்கியில் போட்ட காசு
எண்ணவும் நேரம் இல்லை

சட்டையும் வெள்ளை ஆச்சு
சந்தோசம் கொள்ளை போச்சு

கடைசியாய் சிரித்த தேதி
சத்தியம் நினைவில் இல்லை

எழுதியவர் : தங்கராஜ் (28-Sep-19, 10:32 pm)
சேர்த்தது : Thangaraj
Tanglish : yezhaiyin sirippu
பார்வை : 1281

மேலே