செல்லிடம் செல்

துவாரபா யுகத்தில்
குட்டிக்கண்ணன்
வரம்பு மீறி
குறும்புகள்
செய்கையில்
யசோதை சென்றாள்
உரலைத் தேடி...

கலியுகத்தில்
கட்டிக்கரும்பு
நீ குறும்புகள்
செய்கையில்
பதிவுசெய்ய
ஆவல் கொண்டு
நானோ செல்கிறேன்
செல்லைத் தேடி...

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:58 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 103

மேலே