மென்மலர்

மென்மலர்

பூவிற்கும் பஞ்சிற்கும்
சவால் விடும் மென்மை...

விளையாட்டு பொம்மைக்கும்
உணவளிக்கும் தன்மை..

அழுதபடி நடித்தாலும்
நமைத் தாங்கும் தகைமை..

நமை அணைத்து கொஞ்சுவதில்
பொங்கித் ததும்பும் தாய்மை..

பாசத்திலும் பரிவிலும்
உவமை இல்லா வன்மை...

பார்வையிலும்,குரலிலும்
தளும்பி நிற்கும் தண்மை...

ஆழ்மன உறுதியிலே
மலை ஒக்கும் திண்மை...

வயதான காலம் உதவுதற்கு
வாய்த்த நல்நன்மை...

கண்மணியாம் பெண்குழந்தை
மண் மீதில் வந்த தேவதை
இது நூறுசத உண்மை..

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:56 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 72

மேலே