நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பிறந்தநாள் கவிதை

பிறந்தநாள் கவிதை 💐

நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்.

கலைத்தாயின் தலைமகன்
சரஸ்வதியின் அருள் நிறைந்தவன்
நவரச நடிப்பை வாரி வள்ளலாக வழங்கியவன்
நடிப்பின் இமயம் தொட்டவன்
கதாபத்திரங்களின் தண்மை அறிந்தவன்
செம்மொழி தமிழை அடுக்கு மொழயில்
அழகாக பேசி அசத்தியவன்
சிங்கார தமிழை திறம்பட உச்சரிப்பவன்
வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டியவன்
உணர்ச்சி மிகு நடிப்பால்
எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவன்
தலைமுறை தாண்டி
தன் தன்னிகரற்ற நடிப்பால்
நிலைத்து நிற்பவன்.

கண்கள் நடிக்கும்
இமை நடிக்கும்
இமையின் மயிர் கால் கூட நடிக்கும்
உடல் நடிக்கும்
சதை நடிக்கும்
நாடி, நரம்பு ரத்த நாளம் அனைத்தும் நடிக்கும்.

எத்தனை முகபாவங்கள்
எத்தனை கதாபாத்திரங்கள்
அத்தனையும் அதிசயம்
அத்தனையும் அற்புதம்
அத்தனையும் அளபறியது
அத்தனையும் ஆக சிறந்தது.

ஒரு நடிகன் இத்தனை
நடை நடக்க முடியுமா
பணக்காரனுக்கு ஒரு நடை
பாமரனுக்கு ஒரு நடை
வரலாற்று நாயகர்களுக்கு ஒரு நடை
பக்திமான்களுக்கு ஒரு நடை
இளைஞனுக்கு ஒரு நடை
முதியவருக்கு ஒரு நடை
இப்படி பல நடை பயின்று நம்மை வியப்பில் ஆழ்தியவர்.

நடிப்பின் பல்கலைக்கழகம்
நடிகர்களின் கடவுள்
நடிப்பை அள்ள, அள்ள தரும் அமுதசுரபி
நடிப்பின் அகராதி
நடிகருக்கெல்லாம் நடிகர்
உலகின் ஒரே தலை சிறந்த நடிகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
வாழ்க சிவாஜி. வாழ்க சிவாஜி புகழ்.
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Sep-19, 5:31 pm)
சேர்த்தது : balu
பார்வை : 740

மேலே