கரைந்தது கர்வம்
மெல்லிய குளிரெனக் காற்று
இதமான நிலவினொளி
முகமலர்ந்து வானம் கண்டேன்!
அளவான புன்னகையில்
அம்பை வீசீனாள் வானழகி!
எனைமயக்கும் அழகி நீயல்ல...
உன்னழகை வென்றவள்!
என் இதயம் வென்றவள்...
எனதுரைத்து நகைத்தேன் நான்..!
கர்வம் கொண்ட கண்களால்
இல்லை என்றவள்...
சட்டென மறைந்தாள்!
மின்னலொன்று ஒளிர்ந்திற்று...
அறிந்துகொண்டேன்...
என்னவளை பிரதியெடுக்க அவளனுப்பியதென!
கண்ட நொடி கடந்ததும்..
இடியென ஒப்பாரியிட்டவள்..
கண்ணீர் சிந்தி அழுதாள்!
அக்கண்ணீர் துளிதனில்
அவள் கர்வம் கரைந்தது . . .!