சிரிப்பு
ஏழை
பட்டாசுக்கும் சிரிப்பு
பட்டாடைக்கும் சிரிப்பு
தட்டான் பிடிக்க சிரிப்பு
குட்டை பயலால் சிரிப்பு
நெட்டை உருவம் சிரிப்பு
சட்டை கிழிந்தால் சிரிப்பு
சூட்டித் தனமும் சிரிப்பு
வெட்டி தனமாய் சிரிப்பு
ஒட்டுத் துணியில் சிரிப்பு
ஓட்டுப் போடவும் சிரிப்பு
மொட்டைத் தலைக்கும் சிரிப்பு
பொக்கை வாய்க்கும் சிரிப்பு
வழுக்கி விழுந்தால் சிரிப்பு
அழுக்கு சட்டையால் சிரிப்பு
ஒழுகும் மூக்கால் சிரிப்பு
எழுத்துப் பிழைக்கும் சிரிப்பு
ஓட்டை விழுந்த வீட்டில்
ஏழையின் அந்த சிரிப்பு