பாட்டன் பூட்டன் ஆண்ட நிலம்

பலமான வளமுண்டு பன்னெடுங்காலமாய்
பலங்குன்றச் செய்தது நவீன அறிவியலே
பாலம் பலமாய் வெடித்து வாய்த்திறந்தாலும்
பரிசுத்த மழையை கண்டவுடன் மகிழ்ந்துவிடும்

பறிக்க பறிக்க கீரையாய் விளைந்திடும்
பலவகை மேய்ச்சல் விலங்குகளுக்கு உணவாயிடும்
பஞ்சமா பாதகர்களுக்கும் பல கனி கொடுக்கும்
பருவத்திற்கேற்ப பல வகை விளைச்சல் தரும்

பாழ்படுத்தும் அரசியல் வந்ததால்
பாடுபடும் மக்கள் மனம் படுகேவலமாச்சு
பாட்டன் பூட்டன் ஆண்ட நிலம்
படுமோச நிலைக்கு விற்பனைக்காச்சு

பச்சை நிறத்தால் நிறைந்த புஞ்சை
பாலைவனமாய் மாறிப்போச்சு
பவழம் விளைஞ்ச ஆறும் இங்கே
பரிதாப நிலையில் குறுகலாச்சு

பாரை ஆளும் ஆட்சிக்குழுவோ
பகட்டாய் கொள்கை கொள்ளலாச்சு
பரபரப்பான வாழ்க்கை முறையால்
பாரம்பரிய வாழ்வுமுறை கெடுதல் நலமோ?
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Oct-19, 6:08 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே