அழகிய காதலி
மேகம் மெல்ல நடை போடுதே -- காதல்
கவிதை வரைந்திட வா!!
உள்ளம் ஏதோ விடை தேடுதே -- காலம்
முழுதும் சேர்ந்திட வா!!!
மனம் ஏனோ உன்னை நாடுதே – ஆசை
நெஞ்சம் அழைத்திட வா!!!
வயல் வெளி தமிழ் ஆகுதே – பெண்ணே
கொஞ்சம் அருகே வா!!!
அலை போல உடைகின்றேன்!!
அருகே வந்தால் தொலைகிறேன்!!
அன்பே உன்னை ரசிக்கின்றேன்!!
அழகு காதலாய் நினைக்கின்றேன்!!
அம்மாவின் மறு உருவம் – நீயாக
வேண்டுகிறேன்!!!