கை புடிச்சேன் நானே கலக்கம் என்ன மானே

கிழக்கு வானம் வெளுத்தாச்சு /
குளத்தில் செங்கமலம் சிரிச்சாச்சு/
தெருக் கோயில் மணி அடிச்சாச்சு /
முற்றத்திலே கோலங்கள் போட்டாச்சு/

காதலுக்கு வந்த தடை நீங்கியாச்சு /
காதலிக்கையிலே இருந்த பயம் பறந்தாச்சு/
கலியாணப் பந்தம் நமக்குள் உறுதியாச்சு/
முறையுடன் கணவன் மனைவி என்றாச்சு/

தயக்கம் இன்னும் எதற்கடி
பெண்ணே/
மயக்கம் மனதிலே
திறக்கவில்லையோ கண்ணே/

உன் உள்ளம் கவர்ந்தவனும் நானே /
உன் உள்ளே இருப்பவனும் நானே /
உரிமையோடு கை புடிச்சேன் நானே/
இன்னும் கலக்கம் என்ன மானே /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (2-Oct-19, 1:05 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 40

மேலே