காதல்
அயல் நாட்டு மாது அவள்
ஒரே பார்வையால் என்னை
ஈர்த்துக்கொண்டாள் தன்
இதயத்திற்குள் ......அவள்
புன்னகைக்க நான் மகிழ்ந்தேன்
'பெண்ணே 'யாதும் ஊரே யாவரும்
கேளிர் ' என்ற எம் தமிழ் பூங்குன்றனார்
சொல்லிக்கினாங்க , என்னை நீ
உன் பார்வையால் மனதில் சூடிக்கொண்டாய்
நான் உன்னைக் கேட்பதெல்லாம் கண்ணே
ஒன்றே, அதுதான்' கொஞ்சம் தமிழில்
பேசி சிரிக்க மாட்டாயா. என்றே; நீயோ
அதற்கு ஒரு படி மேல் சென்று , 'கொஞ்சு'
தமிழில் பேசி கொஞ்ச கொஞ்ச சிரித்தாய்
வண்ணத்தமிழ் பேன்தானோ இவள் என்று
நான் எண்ணிடவே.....