கும்பகோண பள்ளித் தீ விபத்து

போய்ட்டு வருகிறேன் என்று சொன்னவர்கள்
போய் வந்தார்கள்பள்ளிக்கூடத்திலிருந்து உயிரில்லாமல்
மலராய் போனவர்கள்
மலர் மாலையாய் வந்தார்கள்

உன் சிவந்த உதட்டில் சிரிப்புடன் சிறப்பாய் பேசிய
பாடச்சொற்கள் இன்றுதான் மூடப்பட்டதோ
குறும்பு செயல்கள் செய்த கரும்பு மழலைகள்
இன்று குறும்படமாய் ஆனதென்ன

பள்ளி மதிய உணவிடம் மதி இல்லாமல் இயங்கியதற்கு
பிஞ்சு மழலைகள்தான் பலியோ
வாய்மொழி அழகாய் பேசிய வண்ண புறாக்கள்
இன்று வாழை இலையில் வந்த தினம்

எழுதியவர் : (2-Oct-19, 12:21 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 23

மேலே