அம்மா கவிதை

எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மியே...
என்றும் மங்காத ஒளி விளக்கே...
இராஜேஸ்வரி தாயே...
வார்த்தைகள் இல்லை அம்மா விவரிக்க...
வாழ்க்கையின் அர்த்தத்தை
உணர வைத்த எங்கள் தாயே
உணர்வுகள் வளர்த்து,
உள்ளங்கை பிடித்து,
உறவுகள் கொடுத்து,
உச்சி முகர்ந்து,
உற்ற துணையாக இருந்த எங்கள் தாயே...
பாரினில் சிறந்த அன்னையின் அன்பிற்கு
உதாரணம் நீங்கள் தானே அம்மா
தளரா மனமும் உயர்ந்த சிந்தனையும்
தந்தாயே எங்கள் அருமை தாயே...
தாங்கிடும் குணமும் எதிர்பாரா மனமும்
தந்தாயே எங்கள் அருமை தாயே...
வாசம் வீசும் ரோஜா பூவாய்
எங்கள் வாழ்வின் வசந்த காற்றாய்
அன்போடு எங்களை ஆதரிக்கும் உறவாய்
எங்களுக்குள் என்றென்றும் புன்னகையுடன்.....
எங்கள் இதய தெய்வமாய்.....
எப்பொழுதும் நீங்கள்....
எண்ணிப் பார்க்கையில் என்னை மறக்கிறேன்
கண்ணீர் மல்க கலங்கி நிற்கிறேன்.........

எழுதியவர் : பாலா (3-Oct-19, 4:08 pm)
சேர்த்தது : Bala
Tanglish : amma kavithai
பார்வை : 456

மேலே