அப்பா
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீ அப்பா!!
அறிவுரை ஊட்டும் வைத்தியர் தானப்பா!!
கோபத்தில் முறைத்தாலும்!!
குழந்தையாய் சிரிப்பாயே!!
கோபத்தில் நான் போனாலும்!!
குணத்தால் சிறப்பாயே!!
வலிமையில் சிறந்தவன் நீதானே
வலிமையற்ற என்னிடம் தோற்றாயே
காரணம் இங்கே தேடினேன்!
உன் புன்னகையால் விடைகொடுத்தாய் அப்பா!!
தோள்மீது தூக்கி உலகத்தை காட்டினாய்!!
உன் துக்கத்தை எல்லாம் முத்தத்தால் ஊட்டினாய்!!
கை தட்டி என்னை உயர்வாங்கினாய்!!
கைகட்டி என்னைத்தான் ஆளாக்கினாய்!!
தமிழ் போல் எங்கும் இதம் ஆகினாய்!!
தலைக்கனம் இல்லா என் தலைவன் ஆனாய்!!
உனது விரலே எனது வழிகாட்டி!!
உனக்கு ஆவேன் நான் தேரோட்டி!!