சுமை தாங்கும் அம்மா

எறும்பு கடித்தாலும் தாங்கவில்லையே!!
என்னைப் பெற்றெடுக்க வலி தாங்கினாய் எப்படியோ!!
உயிரை கைபிடித்து
வலியால் நீ துடித்து
அழகாய் பெற்றெடுத்தாய்
அருமை தாயவளே!!
என் கருவிழி உன் முகம் கண்ட நாளன்று!
கண்ணில் கண்ணீரோடு புன்னகைத்தாய் நீ அன்று!
பேச மொழி இல்லை!
சோகம் உணரவில்லை!
பசியின் வார்த்தை புரியவில்லை!
பாசத்தோடு நீ ஊட்டும் பாலுக்கு ஈடு ஏதும்இல்லை!!
தாலாட்டி மாரோடு தாய்மொழி பாட்டோடு!
உன் நித்திரை தொலைத்து அன்பு
நித்திரை நீ தந்தாய்!!
மழையில் விளையாட முந்தானை கொடையாக!!
அப்பாவின் திட்டுக்கு உன் சேலை அரணாக!!
காயங்கள் பட்டால் கண்ணீரும் மருந்தாக!!
தெய்வமே பிறந்தாயே நீ ஒரு பெண்ணாக!!
அந்த சந்திரனும் சொந்தமானார் நீ ஊட்டும் சோற்றில்
இனி வந்தவரும் வாழ்த்தட்டும் உன்புகழ் நாட்டில்!!

எழுதியவர் : த.வே.தமிழன்பன் (1-Oct-19, 4:10 pm)
Tanglish : sumai thaangum amma
பார்வை : 323

மேலே