பஜகோவிந்தம் பக்தி வெண்பா 8 19 20 21

19.
யோகத்தில் நீதிளை அல்லது மோகத்தில்
சங்கம தில்மகிழ் அல்லது சங்கமின்றி
எந்தச்சித் தம்பிரம்மத் தில்ரமிக்கு மோஅதுவே
ஆனந்தத் தில்திளைக் கும்

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !
20.
பகவத்கீ தையில் படித்திடு வாய்கொஞ்சம்
கங்கையின் தீர்த்தம் அருந்திடு வாய்கொஞ்சம்
கீதமு ராரிபுகழ் பாடு ; எமனிடம்
வாக்குவாதம் இல்லை உனக்கு !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

21.
மீண்டும் ஜனனம்மீண் டும்தான் மரணம்
மறுபடியும் அன்னை வயிற்றில் சயனம்
பெரும்சம்சா ரத்தினில் போராடு தல்கடினம்
ஏமுராரே காத்திடுஎன் னை !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-19, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே