காதல் கிறுக்கல் 5
விழி வழி புகுந்து
சுவாசம் கலந்து
நெஞ்சம் தொட்டு
என்னுள் நிறைகிறாய்!
ஒவ்வொரு விடியலும்
உனக்காய் விடிய
மற்றொரு பாதியாய்
என்னுடன் இணைகிறாய்!
பொய்யாய்ப் புன்னகை
முகத்தில் கூட்டினும்
மெய்யாய் நின்னையே
காணத் தவிக்கிறேன்!
சுற்றும் பூமியாய்
கண்கள் சுழல
சற்றே நின்முகம்
கண்டதும் லயிக்கிறேன்!
ஆறாம் அறிவின்
உச்சம் தொட்டும்
அறியாக் குழவிபோல்
குழைந்திட வைக்கிறாய்!
பேசும் மொழியோ
நிரலாக்க மொழியோ
பத்தியில் பெயர
பார்வையொன்றில்
புலப்பட செய்கிறாய்!
எந்தனைக் காட்டும்
ஆடியுங் கூட
நின்னையே காட்டும்
மாயங்கள் புரிகிறாய்!
நனவில் கதைத்திட
விக்கிடும் வார்த்தைகள்
கனவில் கவியாய்ப்
பொழிந்திட செய்கிறாய்!
நிழலாய் என்றும்
என்னுள் உறைகிறாய்!!!!