இதழ்கள் அசைந்தால்

பல்வரிசை யோமுத்துக் கோவை
பவளஇதழ் கள்முத்துப் பேழை
இதழ்கள் அசைந்தால் கவிதை
விழியசைந்தால் அவளோர் ஓவியம் !

-----வஞ்சி விருத்தம்

பல்வரிசை யில்முத்துக் கோவைச் சிரிப்பு
பவள இதழ்முத்துப் பேழை சிவப்பு
இதழ்கள் அசைந்தால் கவிதையே பேசும்
விழிஓவி யம்எழு தும் !

----பலவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-19, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 139

மேலே