செல்லிடை பேசி மொபைல் போன்

கருவானது உழைப்பு மேல் ஜப்பானில் 1973
உருவானதோ சிறப்பு சேர் அமெரிக்காவிலே 1979
தெரு வந்ததோ அகிலம் சேர் இங்கிலாந்திலே 1989
குறுஞ்செய்தி பரிமாறினர் முதல் முதலே 1992
புகைப்படம் எடுக்க வழிமாறினர் 2000 ஆண்டே
ஆன்டிராய்டுக்கு அடி கோலினர் 2005 அன்றோ
தரணியை தனக்குள் புதைத்த வாட்ஸாப்பு
சத்தமின்றி சந்திக்கு வந்ததே வருடம் 2009
1 ஜி 2 ஜி ஆகி 3 ஜி 4 ஜி ஆகி இன்று 5 ஜிக்கு கணப்பொழுதில்
மாறி ஓடிப் போனதே இதன் அசுர வளர்ச்சிக்கு சாட்சி
உள்ளங்கையில் ஒரு விரல் புரட்சி
உலகம் முழுக்க அதிரடி எழுச்சி
கள்ளங்கபட மறியா துரைக்கும்
கலகமும் சகலமும் தெரியா துணர்த்தும்
செல்லிடை பேசியார் எல்லோரும் நேசிப்பார்
அடுத்தென்ன ஆகுமென இப்போதைக்கு
அறியோம் யாம். - வித்தாகும் பெரும்புரட்சிக்கு
கெத்தான அருமை செல்பேசியே.

எழுதியவர் : D. கிருஷ்ணமூர்த்தி (5-Oct-19, 5:59 pm)
பார்வை : 137

மேலே