மழை

மழைபெய்யும் மழைபெய்யும்
என்று எண்ணிய போதெல்லாம்
வாராத மழை- இன்றேனோ , மழை
இனி வாராதென்றெண்ணி வீணே
இருந்தபோது சற்றும் எதிர் பாராமலேயே
வானைப்பிளந்து கொட்டி தீர்த்தது மாமழையாய்
எதிர் பாரா தாக்குதலுக்கு ஆளான
ராணுவ சேனைப்போல் செய்வதறியாமல்
தவிக்கும் மனிதர், அரசாங்கம்.......
குட்டைப் பனைமரத்தில் கூடுகட்டி
வாழும் தூக்கணாங் குருவி தன
விந்தைக் கூட்டுக்குள் சுகமாக
தன் பேடையுடன் ஏதோ பேசுவது
என் காதில் கேட்க; வருமுன் காவா
மனிதரின் ஓலம் காதில் விழுந்தது
மலையின் தாக்களுக்கு ஈடுபடமுடியாது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Oct-19, 8:19 pm)
Tanglish : mazhai
பார்வை : 231

மேலே