இயற்கை
கடலுக்கு கரைகளுண்டு
நதிக்கும் கரைகளுண்டு
கதிரவன் ஒளிக்கேது கரைகள்
நிலவின் ஒளிக்கேது கரைகள்
கரை ஏதுமில்லாமல் ஒளிதனை
எல்லோருக்கும் பரப்பும்
ஒளி கடல்கள் இவை ...
மண்ணில் உள்ளோர் எல்லோருக்கும்
கேட்காமலே ஒளி தந்து வாழவைக்கும்
பெருங் கடல்கள், ஒளி கடல்கள்
இறைவன் கருணைக்கு எல்லை இல்லை
என்பதை உறுதிப்படுத்தும்
இயற்கை இயக்கங்கள் சூரிய சந்திரர்