கற்பனைப் பாலையில் அலைந்து சோர்ந்த என் கவிதைகள்

நீரோடையிடம் விடுமுறை பெற்று
இவள் விழிகளில் வந்து நீந்துதோ கயல்கள்
நீலவானம் போரடித்ததோ
கார்முகில்கள் இவள் கூந்தலில் கலைந்தாடுதோ
சிப்பி வயிற்றில் சிறை இருந்தது போதும் என்று
இவள் செவ்விதழில் வந்து சிரித்து வாழுதோ முத்துக்கள்
கற்பனைப் பாலையில் அலைந்து சோர்ந்த என் கவிதைகள்
இவள் விழி அழகிலும் இதழ் அழகிலும் வந்து தஞ்சமடைந்ததோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-19, 11:14 pm)
பார்வை : 198

மேலே