சிங்கப்பூர்
தென்கிழக்கு ஆசியாவின் தீவு நாடு
ஊழல் இல்லாத உண்மை நாடு
எல்லோரும் பெரிதாய் பேசும் குட்டி நாடு
தமிழர்கள் அதிகம் வாழும் சின்ன தமிழ் நாடு
கலப்பு பண்பாடு கொண்ட சிங்க நாடு
வர்த்தகத்தில் முன்னணி நாடு
வாழ்க்கையில் சோகம் இல்லாத சொர்க்க நாடு
சந்தை பொருளாதாரத்தில் உயர்ந்த நாடு
சண்டை சச்சரவுகள் குறைவாய் இருக்கும் நாடு
ஏற்றுமதி இறக்குமதி வியாபார செல்வ நாடு
எல்லோரும் சுற்றுலா வந்து போகும் நாடு
புகை பழக்கம் குறைவாக உள்ள நாடு
பகைவர்கள் இல்லாத பண்பு மிகுந்த நாடு
கழிவுகள் காலில் படாத தெளிவு நாடு
விதிமுறைகளை சிங்கப்பூர் மண்ணும் பின்பற்றும் வியப்பு நாடு
வானிலைகளை மாற்றம் செய்யும் வளமை நாடு
நல்ல நாகரிகம் கற்றுத்தரும் தூய்மை நாடு
சுவரொட்டிகள் இல்லாத மகத்துவ நாடு
நடை பாதையில் வசிப்பவர் இல்லாத நாடு
பிச்சை காரர்கள் இல்லாத பிசியான நாடு
தனி நபர் வருமானம் உயர்ந்த நாடு
தேசிய மொழி மலாய் என்றாலும்
ஆட்சி மொழி ஆங்கிலம் என்றாலும்
தமிழ் மொழிக்கு தனித்துவம் கொடுத்து
தமிழனை பெருமை படுத்தும் தங்க நாடு
இந்த சிங்கப்பூரு