இனிய காலை
இனிய காலை பிறந்தது
இங்கு இனிமை தென்றல் வீசுது
பசுமை கண்களை பறிக்குது
பட்டாம்பூச்சி என்னிடம் மெல்ல பேசி சிரிக்குது
பூக்களும் இசை பாடுது
புல்வெளிகள் தலையாட்டுது
வாய்க்கா வரப்புகள் வரவேற்குது
மாங்கா தோப்புகள் ஸ்ருதி சேர்க்குது
மல்லியப்பு வாசத்தோடு என் சுவாசம் பேசுது
குயில்கள் இசையை மெல்ல ஒலிக்குது
தூக்குனா குருவிகள்
என் தூக்கத்தை வந்து எழுப்புது
தூவானம் பொழிந்து
தூறல்கள் என்னை உரசுது
இதில் மயிலாட்டம் நான் கண்டதால்
என் கால்கள் ஒயிலாட்டம் ஆடுது