கருப்பசாமி கோவில்
வாய்க்காலோடும்
வயக்காடு
வரப்போரம் நண்டுவளை
முளைச்சுவரும்
நெல்நாத்து
தலைதடவும் தென்னங்காத்து
காலைநேரப்பனித்துளியில்
குளிச்சுவந்த பட்டுப்பூச்சி
வேப்பமர நிழலடியில்
நட்டுவச்ச வீச்சருவா
ஒத்த விளக்கேத்திவச்ச
கருப்பசாமி கோவிலங்கே
உழுதவனும் களைச்சவனும்
பழையகஞ்சி குடிக்குமிடம்
ஊர்கதையப்பேசிப்பேசி
தன்கவலை மறக்குமிடம்
கிராமத்தான் தாய்மடிதான்
கருப்பசாமி கோயிலடா..