செவப்பி - அத்தியாயம் 17

செவப்பி - அத்தியாயம் 17
========================

     சரி.. பண்ணையார் விஷயம் முடிவுக்கு வந்துருச்சு..

     'ரகுவுக்கு ஒரு ஒரு நல்ல வழி பண்ணனுமே' என நினைச்ச செவப்பிக்கு சிறு வயது ஞாபகம் ஒன்று வந்தது.

     அவள் அப்போது எட்டாம் வகுப்பு மாணவி..

     வகுப்புக்கு ஒவ்வொருத்தரா வர வர.. வாத்தியார் வருவதற்கு முன்னாடியான‌ சந்தோசத்தில் இருந்தது..

     அது முழுஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கின முதல் நாள்..

     அந்த லீவுல நடந்த கதைகள், பார்த்த படங்கள், போன ஊர்கள்.. என சிரிப்பும் கும்மாளமுமாக வகுப்பு இருந்தது..

     கொஞ்ச நேரத்துல ராம் சார் வந்துட்டாரு..

     எல்லோருக்குமே ரொம்பவே பிடிச்ச‌ வாத்தியார் அவர்.. படத்தை விட வாழ்க்கையைத் தான் தெளிவா கத்துக் கொடுத்தார்..

     அவரு வந்தவுடனே ஒவ்வொருத்தரையா நிக்க வச்சு, அவங்க லீவு ஸ்டோரியக் கேட்டு, அதுல ஏதாவது காமெடி பண்ணி, எல்லோரையும் சிரிக்க வச்சுக்கிட்டிருந்தாரு..

     அப்பத்தான் கிளாஸுக்கு வெளியில ஒரு சவுண்ட் கேட்டுச்சு..

     "சார்... சார்.."

     கிளாஸே அமைதியாகி அங்கே கவனிக்க, அங்கு நான் நின்று கொண்டிருந்தேன்..

     'நான் என்று சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு.. அது என்னானு கொஞ்ச நேரத்துல சொல்றேன். இப்ப அங்கே கவனிப்போம்'

     "குட் மார்னிங் சார்... என் பேரு தேன்மொழி.. இன்னைக்குத்தான் ஸ்கூல்ல சேர்ந்தேன் சார்..."

     "குட் மார்னிங்.. வாம்மா.. வந்து உட்காரு.. அட என்னம்மா.. அப்படியே செவப்பி மாதிரியே அச்சு அசலா இருக்க.. உங்களுக்குள்ள ஆறு வித்தியாசம்,எட்டு வித்தியாசம் அப்படி எதுவுமே இல்லை, அவ்வளவு ஒற்றுமை", என சார் சொன்ன வேளை, தேன்மொழி என்னைப் பார்த்தாள். ஒரு சினேகப் புன்னகை பூத்தாள்.
அனிச்சையாக என் அருகே நான் அவளை அமரச் சொல்ல.. அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.

     அடுத்த நாள் ரகு கிட்ட நான் அவளை அனுப்பி வைச்சேன்.. ஆனால் அது நான் இல்லேனு சரியா கண்டுபிடிச்சிட்டான்.. இருந்தாலும் அப்படி ஒரு ஆச்சரியம் அவனுக்கு..

     அன்னைக்கு கிளாஸ்லயே ராம் சார் சொன்னாரு...

     "உலகத்தில மொத்தமாக ஏழு பேர்..  ஒரே மாதிரி இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இன்னைக்குத் தான் செவப்பியோட இரண்டாவது ஆளையே பார்க்க‌றேன்.. இன்னும் அஞ்சு பேரு எந்த நாட்டுல இருக்காங்களோனு.."

     'ஆமா.. அதே தான் ஒரே வழி' என யோசித்த செவப்பி.. இப்ப‌ தேன்மொழி எங்கே இருப்பா?னு தேட ஆரம்பிச்சா..

(தொடரும்)

(அடுத்த அத்தியாயத்தோடு முடியும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (17-Oct-19, 5:40 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 94

மேலே