புதுக்கட்சி

அப்பா புதுசா ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போறேன்னு சொன்னீங்களே அந்தக் கட்சி பேரு என்னப்பா.
@@@@@
நம்ம கட்சிப் பேரே 'புதுக்கட்சி'டா மகனே.
நம்ம குடும்ப நண்பர்கள், உற்றார் உறவினர்கள் தான் நம்ம கட்சில உறுப்பினர்கள்.
@@@@@
சரி எதுக்கு கட்சி ஆரம்பிக்கறீங்க?
@@@@@@
பணம் சம்பாதிக்கத் தான். நம்ம கட்சியைச் சேர்ந்த ஒரு அம்பது பேரு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நெடுஞ்சாலையில ஒரு மணிநேரம் உக்காந்தா நம்ம கட்சிக்கு இலவச விளம்பர ஊடகங்கள்ல. எனக்கும் விளம்பரம். எம் மூஞ்சியை உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் பார்ப்பாங்க.
@@@@@
அப்பறம், வேற என்ன இலாபம்?
@@@@@@
நன்கொடைப் புத்தகம் அச்சடிச்சு வச்சுட்டு ஒரு பத்துப் பேரக் கூட்டிட்டு கடைங்களுக்கு, தொழிற்சாலைங்க, தனியார் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை தருவாங்க.
@@@@@
எப்படி?
@@@@
ஏதாவது போராட்டம் நடந்துச்சுன்னா நம்ம கட்சி ஆளுங்க கல்லேடுத்து அடிச்சு அவுங்க கட்டடங்கள், காருங்க, இருசக்கர வண்டிகங்கள சேதப்படுத்திருவோம்ங்கிற பயம் தான். பயத்திலயே நன்கொடை தருவாங்க. தேர்தல்கள் நடக்கிறபோது நம்ம கட்சி எல்லாத் தொகுதிலயும் போட்டியிடும்னு அறிவிச்சாப் போதும். பெரிய கட்சிங்களே அவுங்க வாக்கு வங்கில சேதாரம் ஏற்படும்னு பயந்து நம்ம கட்சிய நல்லா கவனிப்பாங்க. இதுதான்டா மகனே நான் கட்சி ஆரம்பிக்கிறதுக்குக் காரணம். பணம் கொட்டும்டா.
@@@@@
அப்பறம்.
@@@@@@
அந்த பணத்தை வச்சு அனைத்துலக பள்ளி (International School) ஒண்ணு ஆரம்பிக்கலாம். நம்ம ஆசிரியர்கள். நம்ம மாணவர்கள். பள்ளியோட பேரப் பாத்துட்டு பணக்காரப் பிள்ளைங்கதான் நம்ம பள்ளில சேருவாங்க. கொழுத்த வருமானம் கிடைக்கும். அத வச்சு கல்லூரி. ஒரு அஞ்சு கல்லூரி வந்திருச்சுனா அதை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Deemed to be University) ஆகிடும். அதுக்கு நான் தான் வேந்தர். நீ சீக்கிரம் உன்னோட முதுகலைப் படிப்பை முடிச்சிட்டு முனைவர் (Ph.D) பட்டத்தை வாங்கிடு. நம்ம பல்கலைக் கழகத்துக்கு நீ தான் துணைவேந்தர். எனக்கும் அப்பிடியே நம்ம பலகலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தைத் தரப்போகுது.. எனக்கா அதுவரை கெடச்ச கல்வி வள்ளல், கல்வித் தந்தை, கல்விச் செம்மல், கல்வி மாமணி பட்டங்களைவிட டாக்டர் பட்டம்தான் உயர்வான பட்டம்.
@@@@@@
அப்பா நீங்க உருண்டு புரண்டு தட்டுத் தடுமாறி இளங்கலைப் பட்டம் வாங்கியிருந்தாலும் உங்க சிந்தனை யாருக்கும் வராதுப்பா.
@@@@@
நான் அனுபவத்தில பாத்தத வச்சுத்தான்டா சிந்திக்கிறேன். இதில புதுசா ஒண்ணுமில்லடா மகனே.

எழுதியவர் : மலர் (16-Oct-19, 6:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 163

மேலே