மருத்துவ வெண்பா - எருமைத் தயிர் - பாடல் 12

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா:

எருமைத் தயிருக்(கு) எரிவுபித்தம் போகும்
வருமைக் கரப்பனொடு வாதம் – பெருமிதஞ்சேர்
தூல வுடலமுமாந் தூயறிவு மந்தமுறுங்
கோல விழிகுளிருங் கூறு.

குணம்:

சாப்பாட்டின் முடிவில் சாதத்துடன் கூட்டி உண்பதனால், எருமைத் தயிருக்கு எரிச்சலும், பித்த நோயும் போகும்.

கபத்தைப் பற்றிய கரப்பான், வாதம், அதிதூல உடல், அறிவு மந்தம், கண்கள் குளிர்ச்சி உண்டாகும்.

இதற்கு மிகுந்த குளிர்ச்சி உண்டு என்பதால், தாளிதம் செய்து சேர்த்துக் கொள்வது நன்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-19, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே