மருத்துவ வெண்பா - செம்மறியாட்டுப் பால் - பாடல் 11

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா:

செம்மறிப்பால் பித்தஞ் சிலேஷ்மத்தை யுண்டாக்கும்
விம்மும் வயிறுமிக மேன்மூச்சாம் - கொம்மை
வருமுலையாய்! பத்தியத்தில் வாராது வாய்வாம்
பருகுவர்க்கு நாளும் பகர்.

குணம்:

வாத ரூபமான செம்மறியாட்டுப் பால் பித்தம், சிலேஷ்மம் உண்டாக்கும். வயிறு உப்புசத்தால் (Indigestion) மேல்மூச்சு வாங்கும்.

வாய்வும் உண்டாக்கும். பத்தியத்திற்கு உதவாது என்றும் இப்பாலை அருந்துபவர்களுக்கு தினமும் சொல் என்கிறார் இவ்வாசிரியர்.

வாத சம்பந்தமான பிணிகள் வருவதால் பசுவின் பாலைப் போல தினசரி இந்தப் பாலை உபயோகப் படுத்தாமலிருப்பதே மிகச் சிறந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-19, 2:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே