மருத்துவ வெண்பா - வெள்ளாட்டுத் தயிர் - பாடல் 13

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா

ஒப்பவெள் ளாட்டின் உயர்தயிரை யுண்பார்க்குத்
தப்பிலையாம் மிக்கநலந் தான்பெருகும் – ...செப்பவதன்
ஆடைக்கு மந்திக்கு மாயினும் குற்றமிலை
கோடைக்கா லத்திலுணக் கூறு.

பொருள்:

ஒத்துக் கொள்ளக்கூடிய வெள்ளாட்டுப்பாலில் தயாரித்த தயிர் உயர்வானது.

இத்தயிரை உண்பவர்களுக்குக் குறைவில்லாமல் மிகுந்த நலம் பெருகுமாம்.

அதன் ஆடை எளிதில் சீரணிக்காமல் மந்தத்தை உண்டாக்கும். ஆயினும் கோடைக் காலத்தில் வெள்ளாட்டுத் தயிரை உண்பதால் குற்றமில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-19, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே