பெண் வாழ்க்கை
பெண் என்று சொல்லும் சொல்லை
பேரன்பு என்று சொல்லலாம்
அவ்வளவும் அர்ப்பணித்தால் ஆணுக்காக
அவ்வனைத்தும் தள்ளி வைத்தால் ஆசைகளை கூட...
சில நேரம் சிரித்து பேசும் நிமிடம் போதும்
அதை எண்ணி அளவுக்கு அதிகம் ஆசைகள் கொள்வாள்...
பிடிக்காத சில விஷயம் கூட பிடித்து செய்வாள்
தனக்கு பிடித்தவருக்கு பிடிக்க வேண்டும் என்று....
பருவ மாற்றம் பார்த்து அவள் பழகிட வேண்டும்
பசிக்கு உணவு வேண்டுமென்றால் செய்திட வேண்டும்
பிறந்த இடத்தில வசதிகள் பல இருந்திடும் போதும்
புகுந்த இடத்திற்கு ஏற்ப அவள் மாறிட வேண்டும்....
உயிரை சுமந்து தோற்று விக்கும் வலியை மதித்து
யாவரும் பெண் அவளை மதித்திட வேண்டும்....