இடைச் செருகள் கூத்தாடும்

நேர் பட நில்!
ஊர் பட கூடு!
நாக்கு சுழல்!
நாணயம் சூழல் தவிர்!
வாக்கு குடு!
உண்மை நடு!
ஓங்கு திமிர் உண்மையெனில்
ஓடி ஒளியாதே!
பழகு!
பழக்கம் அழகு!
மனம் ஒன்றிப் போக
தினம் கூடு,
கூட்டம் அழகு!
கூடு பறவை
வீடு மனிதன்
நாடு ஒன்றுதான்
ரெண்டுக்கும்!
கல் எறிந்து களைக்காதே
நடுநிலை சமரசம் புரிய
வாதிகள் இங்குண்டு
வாய் திறக்கா வாதங்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
அடைபட்டு ஊர் ரெண்டாக
இடைச் செருகள்
கூத்தாடி கொண்டாடும்...

எழுதியவர் : புரூனே ரூபன் (21-Oct-19, 8:41 am)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 61

மேலே