ஜன்னலோர பயணம்❤
மனக் கடலோரத்தில்
மிதவையான நினைவுகள்
கரைசேர முடியாமல்
தத்தளிக்கிறது அந்த
ஜன்னலோர பயணத்தில்.....
சில மணிநேர
பயணம் தான் அது
ஒட்டு மொத்த வாழ்க்கையின்
நிறங்களை தடவி தடவி போகிறது
அந்த பயணம் பற்கள்
தெரியாமல் சிரிப்பில்
சிக்க செய்கிறது...
அந்த பயணம் விழியை
கசக்கி பிழிந்து கண்ணீரில்
முகத்தை கழுவவும் செய்கிறது
பயண முடிவில் உடல்
இறங்கிவிட்டது உள்ளம்
ஐன்னலோரத்தில்
💢இஷான்💢