காயப்படுத்தியவர்கள்

காயப்படுத்தியவர்கள்

புரையோடி போயிருக்கும்
காயங்கள் இது
உடல் காயமல்ல
உள்ளத்தின் காயம்
அவர்களுக்கே தெரியாது
இந்த காயங்கள் சமுதாயத்தில
அவர்களை பல படி
முன்னேற்றியிருக்கும்
இருந்தும்..!
அன்று பட்ட
காயத்தை ஆற விடாமல்
தாங்களே குத்தி கிளறி
இரணமாக்கி
மனதுக்குள்
புரையோட வைத்திருப்பவர்கள்

காயப்படுத்தியவர்கள்
காணாமல் கரைந்து போயிருக்கலாம்
அல்லது வாழ்ந்து கொண்டும்
இருக்கலாம் !

அவர்களை விட்டு விட்டு
காயங்கள் ஆறுவதிலும்
மற்றவர்கள்
தன்னால் காயம் படாமலும்
பார்த்து கொண்டால்

இந்த கவிதையின் காரணியாக
தாம் இருக்கவேண்டியதில்லை
அல்லவா !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-19, 1:02 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 155

மேலே