வாழ்க்கை

வாழ்க்கை

எதையோ தேடி
எங்கோ செல்கிறோம்
யாருக்கும்
சொல்லாமலே...!

வீதியில் நின்று
விதியைத் தேடினால்
வழி தெரியும் என்று..

என்றோ ஒருநாள்
நின்று பார்ப்பின்
மீளுமா
தொலைந்த வாழ்க்கை..

எல்லாமும் தெரிந்தும்
ஏனென்று அறிந்தும்
ஏதும் தெரியாதது போல.

ஓடிக் கொண்டிருக்கிறோம்
மூர்ச்சையாகியும்
நில்லாமல்?!

சுயத்தை தொலைத்த பின்
அடையாளங்கள்
அனாதைகளாக..

சிரத்தைகள் அனைத்தும்
விதைத்து தேடிய
விலாசம் அருவமற்றே....

முற்றிய கதிரது
பதராகிப் போனால்
விதைத்தவனுக்கு
ஆதாயமென்ன..

_பாவலர் தே. கருணாகரன்
வில்லியனூர்

எழுதியவர் : வீ ஆர் கே (20-Oct-19, 4:11 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 129

மேலே