வாழமர தண்டே மரிக்கொழுந்து செண்டே

வலங்காபுரி ஆளும் மகராணி
மவளே/
கொடாரிக் கொண்டைக் காரி
மவளே/
மோமணம் உடுத்தும் கோமாளி
மவளே/
வாடியென் வடகப்பட்டி மாமன்
மவளே/
காட்டிக்கடி கெண்டைக் கால
என்னவளே /

முறையோடு உன்னை அள்ளப்
போறேன்/
நுரையாக நானும் பூசிக்கப்
போறேன் /
புதுக் கதையெல்லம் சொல்லப்
போறேன்/
இராத்திரித் தூக்கம் பறிக்கப்
போறேன்/
புது மயக்கம் கொடுக்கப் போறேன்/

சாரை போலே ஊர்ந்திடப்
போறேன் /
எறும்பைப் போலே சுவைத்திடப்
போறேன்/
செவ்வாழைத் தண்டான இடையின்
மேலே/
மெதுவாக முத்தங்கள் பதித்திடப்
போறேன்/
அருகே அமரடி வாழத் தண்டேமரிக்கொழுந்து
செண்டே/

தேர்வுக்கு நன்றிகள் ❤❤🌹🌹🙏🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Oct-19, 8:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 109

மேலே