சோர்வு ...

இலட்சியக் கனவுகள் கண்களில் இருக்க
சாதிக்கத் துடிக்கும் நெஞ்சமும் இருக்க ..
அலட்சியத்துடன் அதனை எரிந்து - என்னை
சாதாரணமாய் நடக்க வைத்தாய் !

காலையில் எழுந்தவுடன் கடமையைக் கணக்கிட்டு
மாலைக்குள் முடித்துவிட திட்டமிடும் திறமை
அதனைக்
காற்றில் பறக்கவிட்டு என்னையும்
காற்றலையை சிறகடிக்கச் செய்தாய்!!

நாள் முழுதும் உழைத்து
நாளை உணவிற்கு வழி தேடும்
உண்மை உழைப்பாளர்..
களைத்துறங்கும் சிறிது நேரமோ
கனமாய் மறையும்;

ஆனால்

நடையற்று நன்கு உண்டு நான் இங்கு
கண்ணுறங்கும் நேரமோ யுகமாய் மாற
என்ன செய்தாய் நீ ?
சோர்வு என்கிற சோம்பேரிதனமே !!!

எழுதியவர் : Archana (11-Sep-11, 1:21 pm)
சேர்த்தது : ArchanaD
பார்வை : 376

மேலே