சில உறவுகள்

இடைவெளி இடத்தால் அன்றி
மனதால் அல்ல...
உரையாடல்கள் நிகழாமல் நீண்டு கொள்கின்றன...
நிசப்தத்தின் நெகிழ்வுகளில்....
இவை நெடுந்தூர பயணமா...
சிற்றுந்து பயணமா....
கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும்
நல்ல இதயத்தின் அன்பை
பெற்றதிலே எனக்கோர் அகமகிழ்வு...
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயலுக்கு வலிமை அதிகம்....

எழுதியவர் : ப்ரியா (23-Oct-19, 8:34 am)
சேர்த்தது : priya
Tanglish : sila uravukal
பார்வை : 264

மேலே