தமிழ்வளர் கண்ணே
பத்திரிக்கைக்கு
எங்கள் திங்களி தழ்தெளி யும்தமிழ்
என்று நான்நினைத் தெண்ணமும் பொய்த்தது
தங்கத் தின்.நிறை போல்தமி ழின்நிறை
ஏறு மென்றுநா னும்நினைத் தேன் ஐயோ
பங்கப் பட்டதென் எண்ணமும் தெளிதமிழ்
செய்கை பேரிருள் பெரியார் ஏத்தலே
அங்க மும்துடிக் கும்மெனக் கும்பெரியார்
ஏத்து வன்எழுத வன்முறைக் கூடாதே
தெளியாத் தமிழ்பத் திரிக்கை ஒன்று
தெளியவே எழுதும் மடலாமி தவர்க்கும்
புலவனும் வித்வானும் தமிழ்பல படித்தார்
புலவர் தொலைதூரம் அன்றுசென்று படித்தார்
கம்பன் கவிதைகள் குறள்நயம் படித்தார்
கவிதை பலபலவும் எழுதக் கற்றார்
கவிதைபுனை யக்கற்க மேதையாம் மூடர்
கவிஞன் தொழுதானா தாய்சரசு வதியை ?
கம்பன் தொழுதகதை தெரியும் அவனுக்கு
கவிதைப் புனைதல் விட்டு
கவைக்குதவா பெரியாரை போற்றுதல் வீணே
உன்மையவன் எழுதிய இலக்கியம் என்னென்ன ?
உன்மத்தம் அவனுக் கில்லை உனக்கே
உன்னை அவனும் நினைத்தா னில்லை
என்ன நினைத்து அவனை ஏத்துகிறாய்
உன்புலமை வியந்தேதும் பரிசுகள் ஈந்தானா?
உன்புலமை காட்ட அவனென்ன கவியரசா
நீபடைத்த் இலக்கியம் என்னென்ன சொல்லும்
நீத்தமிழ் நிற்க எடுத்தசா வாமையெது
அரசியல் உமக்கெதற்கு அழகுதமிழ் இருக்க
நெற்றிநீர் பூசிபக்தித் தமிழ்வளர் கண்ணே