முத்தமிட்டு முன்னேறு

முயற்சிகள் தோற்கும்
தளர்ந்துவிடாதே !
கொஞ்சம் வருந்திவிட்டு
மீண்டு எழுந்து வா
விதைகூட இங்கு விழுந்து
எழுந்து வருகிறது
தோல்விகள் கூட ஒரு நாள்
தோற்றுப் போகும்
நம்பிக்கை என்றும்
தோற்றுப் போகாது
விருட்சமாக அகண்டிடு
முட்கள் பாதையில்
முத்தமிட்டு ‌முன்னேறிடு!!!

எழுதியவர் : உமாபாரதி (23-Oct-19, 11:22 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 106

மேலே