மோகம் கொள்ளாதே

அதோ எந்தன் ஜீவன்!
நதிவழியே நாளும் ஒட,
பாறைகளில் மோதி வலியுனுள் மூழ்கி அழுகிறது மெல்ல மெல்ல.

உனக்கென்ன பெண்ணே!
நீ வென்றாய்!
என் மனதைக் கொன்றாய்!
வேறு மனம் தேடிக் கண்டு மகிழ்ந்தாய்!

ஐயோ! எந்தன் ஜீவன்!
வலிகளில் மூழ்கியதால் வறட்டு பிடிவாதத்தில்,
வைராக்கியத்தில்,
மீண்டும் அந்த தவறை செய்யேனென்ற எண்ணத்தில் என்னை சுற்றி கோட்டைகட்டி என்னை அதிலே குடி வைத்து தனிமைப்படுத்துகிறது.
பெண்ணே! உன்னை நினைத்தாலே மன பலம் உடைஞ்சு போகுது!

வேண்டாம் இந்த பெண்ணே சகவாசம்.
என்னை செய்ய இயலாது அவ்வளவு பெரிய சாகசம்.
விஷத்தை வைப்பாளா?
பாசத்தை வைப்பாளா?
ஊடுருவிப் பார்த்தால் எல்லாம் போலி வேஷம்.

பகட்டு ஆடைகளிலே மின்னுதடா!
கைக்குட்டையும் மேலாடையாகிப் போனதடா!
பெண்ணை மனதாலும் நினைப்பது பாவம்!
வேண்டாம் மோகம்!
நீ கொண்ட மோகம் உன் மன பலம், உடல் பலம் இரண்டையும் பலவீனமாக்கும்!
நொஞ்சானாவாய்!
மாடு போல் உடல் வளர்ந்திருந்தாலும் இயலாமையில் நீ வாழ்வாய்!
அறிவு மழுங்கும்.
புத்தி பேதலித்து திரிவாய் பெண் மோகத்தாலே!
அந்த சிரிப்பில் மயங்கிடாதே!
நாறும் சதையும் எலும்பையும் அழகு என்று கிறங்கிடாதே!
உன் மனதைப் பார்த்துக் கொள் நல்லபடி.
உணர்ந்து பார் நான் சொன்னபடி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Oct-19, 9:37 am)
Tanglish : mogam kollathe
பார்வை : 369

மேலே