மனிதனும், ஆசைகளும்
மனிதனின் எண்ணங்கள் எப்போதும்
அலையலையாய் ஆசையை நோக்கியே
செல்லும் , அலையாய் அலையும் அவ்வெண்ணங்களை
ஒரு புள்ளிக்குள் சென்றடையுமாறு மனதை
அடக்க ...... அடக்கிடலாம் அந்த மெய்யப்பொருளாய்
அலைகளை நினைத்து , அது மட்டுமே கருத்தில்
நிலைநிறுத்த...இதுதான் 'தியானம்'
மனத்தைக் கட்டுப்படுத்த எண்ணங்கள்உயரும்
எண்ணங்கள் உயர மனிதனும் உயர்வான்
பற்றுகள் எல்லாம் தாமாகவே நீங்கும்
பற்றில்லா மனிதன் புனிதன் ஆகிறான்
மனிதனும் 'கடவுள் பாதையில்'......