பதுமையாய்

விழியோர கண்மை உன்
உதட்டோர இளநகை

கூந்தலில் சூடிய மல்லிகை

மார்பு இறுகிய இரவிக்கை
என

அலங்கார பதுமையாய் என்
முன்னே நிற்க

உன் அனுமதிக்காக நான்
தவிக்க

மௌனப்போராட்டத்தில் மனம்

நிரம்பிய ஏரியாய் வடிகாலுக்கு
தவிக்க

கரை உடையும் முன் எடுத்துக்
கொள் என்னை

தந்துவிடு உன்னை

எழுதியவர் : நா.சேகர் (23-Oct-19, 4:54 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pathumaiyaai
பார்வை : 327

மேலே