நச்சுப்பூக்கள்

சில பூக்கள் பார்ப்பதற்கு கொள்ளை அழகு
மயக்கும் வாசமும் உண்டு
ஆனால் அவை நச்சுப்பூக்கள்
'கஞ்சா பூக்கள்' பார்ப்பார் மனதை
ஈர்க்கும் அழகு....
கஞ்சா மனதை உருக்கி மயக்கும் போதை

படமெடுத்து ஆடும் நாகம்
கொள்ளை அழகு ....
அதனால்தானோ என்னவோ
பரதத்தில் 'பாம்பு நடனம்' அலாதி

சில பொய்கையும் அழகே
ஆனால் அவற்றின் நீர் .......
தாகத்தில் நாடி போவாற்கு நச்சு

சில நட்பும் ...
கற்கண்டு பாகின் உள்ளே
வைத்த விடம்போல் ...
நல்ல நண்பனை நாட தவறின்
தீய இத்தகை நட்பின் வலையில் வீழ்ந்து
தவிப்பர் வீணே மானிடர்

சில மனிதர் ...
ஆணோ, பெண்ணோ
பார்க்க, பேச அழகோ அழகு
இவர் உள்ளமெல்லாம் நச்சு
இதை அறியாது இவர் உறவில்
சிக்கி அழிந்தவர் ஏராளம்

அழகிய பொருட்களெல்லாம்
மனதிற்கு இன்பமூட்டலாம்
அவற்றில் நச்சில்லா அழகு
அறிதல் நமக்கு அழகு
நலம்பெற நாம் வாழ

விடமே மருந்துமாம்
சித்தர் கூறி எழுதி சென்றார்
படமெடுத்தாடும் பாம்பின் நச்சில்
பாம்பின் கடிக்கே மருந்து
கொடிய .புற்று நோய்க்கும் மருந்து'

அழகை ரசிப்போம், அழகில் நச்சை பிரிப்போம்
நச்சை அகற்றி வாழ்வோம்
வாழ்வை வளமாக்கி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-19, 11:45 am)
பார்வை : 46

மேலே