கோலம்

எறும்பு தின்றுப் போக அரிசி
மாக்கோலம் நீ போட

கோலம்போடும் உன் கோலம்
என்னைக் கொன்று போடுகிறது

கோலம் அழகா கோதையழகா
என கேட்கும் மனதிற்கும்

அழகிய கோதையோடு போட்டிப்
போடும் அழகு கோலமென

மனம் சொல்லிப்போகிறது

எழுதியவர் : நா.சேகர் (28-Oct-19, 8:03 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kolam
பார்வை : 82

மேலே