மறக்கவில்லை
கண்களில் நீரோடை
தடுப்பணை போட ஏனோ
உன் விரல் மட்டும் காணவில்லை
தோழமை அறிந்தபோதிலும்
தோல்வி உணர்ந்த போதிலும்
வேள்வி நடப்பினும்
என் வேதனை அறிய நீயில்லை
கை விரல் பிடிப்பினும் மறந்தேன்
கள்ளன் உன் நெஞ்சு கல்லென்று...
கள்ளி நான் முள் குதித்தான் வீழ்ந்தேன்
காரணம் அறிந்து கானகமாகி போனேன்...
விதைக்கும் முன்னே களையெடுத்தாய் என் இதயத்தை
விடை தேடிய தேடியே தொலைய வைத்தாய் என் வினாவை
தொலைவில் உன்னை வைத்து
தொலைத்துவிட்டேன் என்றேன்
மனதில் உன்னையிட்டு
மறந்துவிட்டேன் என்றேன் ...
என் கண்களின் காதலை உனக்கு காட்டாமல் கடத்தித்தான் செல்கிறேன்.....
ஆனால்
ஏனோ மறக்க முடியவில்லை
இமை மூடிய கண்ணுக்குள்ளும்
இதழ் மூடிய இதயத்துக்கும்
நீ எழுப்பும்
மெல்லிய சலன அதிர்வுகளை.....