மானிடர் உற்பத்தி தொடக்கம்
கழிவு உறுப்பால் கருவறையுனுள் செலுத்தப்பட்டு
கடுமை போராட்டத்திற்கு பின் கருவாய் உருவாகி
கலங்கி அழியாமலும் கடுஞ்சிதைவு ஆகாமலும்
கடுகளவிலிருந்து கனந்தோறும் வளர்ந்து
பெரும்பானை வயிற்றில் பெருந்துன்பத்தோடே
பிறை போலே வளர்ந்து முழு நிலவாகி
முதிர்வுற்ற நிலையில் முக்கியதால் பிறப்பெய்தி
காற்றை முதலில் அறிந்து கடும் வெப்பம் உணர்ந்து
களவு எண்ணங்கொண்ட இழி மாந்தர் கூட்டத்தின்
கடுமை வார்த்தைக் கேட்டு கருணையற்ற சொல்லால்
கலவரமாகி காகித ஓடம் கடலில் ஓடுவதைப் போல்
கற்றும் கேட்டும் அறிந்தும் புரிந்தும் தெளியும் போது
மனமெனும் மாயை திரு மணம் புரிய துணிய
மங்கை ஒருவளின் அங்க அழகில் அது மயங்க
மகத்துவமான அறிவு அதற்குப்பின் மங்கி குறுகி தேய
மங்கல நாளில் மானிடர் உற்பத்தி தொடங்கியது அங்கு
---- நன்னாடன்.

